மூடிய மைதானம்.. கூரையில் சிக்கிய பந்து; அம்பயரின் முடிவு சிக்ஸ்..? வைரலாகும் Video!
பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் கூரையில் சிக்கிய பந்தை நடுவர் சிக்ஸர் கொடுத்துள்ளார் .
பிக்பாஷ் தொடர்
ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது வருகிறது. இதில் மெல்போன் மற்றும் ஹோபார்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி மேற்கூரை மூடிய மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது ஹோபார்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்டோர்மார்ட் அடித்த சிக்சர் பேட்டின் மேல் விளிம்பில் பட்டு ஸ்டேடியத்தின் மேற்கூரையைத் தாக்கியது.
சிக்ஸர்
மேலே சென்ற பந்து கீழே வரவில்லை. ஆனால் பந்து ஸ்டேண்டில் விழுந்தது தெளிவாக தெரிந்தது.
அண்மையில் பிக் பாஷ் லீகில் செய்யப்பட்ட மாற்றங்கள் சிக்ஸ் அடிக்கப்பட்ட பந்து கூரையைத் தாக்கினால் பந்து சென்ற திசையைப் பொறுத்து அது டெட்பாலா? அல்லது சிக்ஸரா? என்பதை இறுதி செய்ய நடுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் ஆன்-பீல்ட் அம்பயர்கள் பந்து சென்ற திசையைப் பொறுத்து அது சிக்ஸர் என்று அறிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
This is wild ?
— KFC Big Bash League (@BBL) January 4, 2024
Ben McDermott just hit a six that got lost - IN THE ROOF?!#BBL13 pic.twitter.com/58F4zWScnz