பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பைடனின் 2 டிரில்லியன் டாலர் அதிரடித் திட்டம்

america economy kamlaharis
By Jon Jan 16, 2021 07:37 AM GMT
Report

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பைடனின் 2 டிரில்லியன் டாலர் அதிரடி திட்டம் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதனை மீட்டெடுக்கும் பொறுப்பாக வீடுகளுக்கு நேரடி நிவாரத்திட்டத்தின் கீழ் ஒரு டிரில்லியன் டாலரும், கொரோனா தடுப்பூசிக்காக 415 பில்லியன் டாலர்களும் வழங்க உத்தேசித்துள்ளதாக செய்தியாளர்களிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிதா நலிவடைந்த சிறு தொழில்கள் மற்றும் வணிகங்களை சீரமைப்புக்கு 440 மில்லியன் டாலர் செலவழிக்கப்படும் எனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.