ரஷ்யாவை தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்கவில்லை : அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Joe Biden Russo-Ukrainian War Ukraine
By Irumporai May 31, 2022 06:22 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் நாட்டில் போர் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், ரஷ்ய ராணுவம் அதன் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது ,தற்போது வரை இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து அமெரிக்கா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது , ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும், உக்ரைனுக்கு உதவ பல்வேறு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன.

ரஷ்யாவை தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்கவில்லை : அமெரிக்க அதிபர் ஜோபைடன் | Biden Us Ukraine Rockets Can Reach Russia

இந்த சூழ்நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் உக்ரைனுக்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில் ரஷ்யாவினை நேரடியாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.