பதவியேற்றவுடன் புதிய உத்தரவுகளை பிறப்பித்த ஜோபைடன்

america election states kamala
By Jon Jan 22, 2021 07:18 PM GMT
Report

அமெரிக்காவில் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார்.பதவியேற்ற முதல் நாளிலேயே 17ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார் ஜோபைடன். புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார்.

அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார். பின்னர், அமெரிக்க அதிபரின் அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் பணியை தொடங்கினார்.

அமெரிக்க பதவியேற்ற முதல்நாளில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க மீண்டும் இணைவதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும், அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்று அரசு அலுலவலகங்களில் முகக் கவசம் சமூக இடைவெளி கட்டாயம் எனவும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் அதிக ஆணைகளில் கையெழித்திட்டுள்ளார். 

பதவியேற்றவுடன் புதிய உத்தரவுகளை பிறப்பித்த ஜோபைடன் | Biden President Us United

பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.