ஜோ பைடனின் அதிரடி முடிவால் இந்தியர்கள் பெருமகிழ்ச்சி
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும். இதன் மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும்.
அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை அனைத்தையும் ரத்து செய்தார். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பெற்ற பிறகு ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும்.
இந்த எச்-4 விசா மூலமாக வேலைவாய்ப்பு நடைமுறையில் இருந்தபோது அதிகளவில் பயன்பெற்றது இந்தியர்கள் தான். அதனால், இந்த நடைமுறை திரும்ப வருவது இந்தியர்களுக்கு பெருமகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.