சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு போன் செய்த ஜோ பைடன்: பேசியது என்ன?

human taiwan beijing
By Jon Feb 11, 2021 02:57 PM GMT
Report

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஜோ பைடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு போன் செய்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அமெரிக்கா - சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார்.

சீனா உடனான அமெரிக்காவின் வர்த்தகப் போர் புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு சீனா உடனான உறவில் மாற்றம் ஏற்படும் எனச் சொல்லப்பட்டு வந்தது. தற்போது ஜோ பைடன் முதல் முறையாக அழைத்து பேசியுள்ளார். அந்த விவரங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சீன அதிபருக்கு அழைத்து சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். அதே சமயம் சீனாவின் மனித உரிமை மீறல்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும், தைவானை மிரட்டுவதையும் கண்டித்துள்ளேன்.

அமெரிக்க மக்களின் நலனுக்காக சீனா உடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் தெரிவித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்