கெட்ட வார்த்தையால் திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பு

america joebiden ஜோபைடன்
By Petchi Avudaiappan Jan 25, 2022 11:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை ஒருமையில் கெட்ட வார்த்தை போட்டு திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்ட தருவாயில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி பைடனிடம் நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு கடுப்பில் இருந்த ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடைந்து அனைவரும் கிளம்ப தயாராக இருந்தனர். கேள்வியைக் கேட்டதால் டென்ஷனான பைடன் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என நினைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அந்த செய்தியாளரை பார்த்து, 'அது மிகப்பெரிய சொத்து... அதிக பணவீக்கம்...முட்டாள்தனமான' என ஆரம்பித்து அந்த கெட்ட வார்த்தையால் திட்டியது மைக்கில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் பொதுவாக அனைவரும் உபயோகப்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் என்று இருப்பதால் ஜோ பைடன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.