ரஷ்யா தற்போது இன அழிப்பை தொடங்கிவிட்டது : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ukraine biden genocide putin
By Irumporai Apr 13, 2022 07:07 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளி என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் தற்போது ரஷ்ய அதிபர் இன அழிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்தை கடந்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது , அதே சமயம் உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷ்யா ரணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது .

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த பகுதிகளில் வாழும் பெண்கள் ரஷ்ய ராணுவத்தினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுவதாக செய்திகள் வெளியான ஆனால் இந்த செய்திகளை ரஷ்யா மறுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோபைடன் :

உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்துவது நிச்சயமாக இன அழிப்பு தான். இதை சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழக்கறிஞர்கள் மூலமே சட்டபூர்வமாக உறுத்திப்படுத்த வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இது இன அழிப்பு என்றே தோன்றுகிறது.

உக்ரைனியர்களே இருக்கக் கூடாது என்பது தான் புதினின் எண்ணமாக உள்ளதாக ஜோ பைடன் கூறினார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் கருத்திற்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘‘ இது சிறந்த தலைவரிடமிருந்து வந்துள்ள சத்தியமான வார்த்தைகள் என கூறினார்

தற்போது வரை இரக்கமே இல்லாமல் உக்ரைன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா, முக்கிய தலைநகரான மரியுபோல் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி அங்குள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.