மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் சைக்கிள் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

M K Stalin
By Swetha Subash May 14, 2022 01:44 PM GMT
Report

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள்,

மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் சைக்கிள் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! | Bicycle Be Provided Class 11 Students In 3 Months

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ITI) பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய ஏற்கனவே ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6.18 லட்சம் மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.