பைபிளில் உள்ள அனைத்து வசனத்தை ஒப்புவித்து உலக சாதனை படைத்த சிறுவர்கள் - குவியும் பாராட்டு
சென்னையை அடுத்த படூரை சேர்ந்த ஜோசப். இவருக்கு அபிஷேக் (10), கெவின் எபிநேசர் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரும் தனியார்ப் பள்ளியில் படித்து வருகின்றனர். ஜோசப்பின் இரு மகன்களுக்கும் சின்ன வயது முதல் நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தனர்.
இதை அறிந்த ஜோசப், சிறுவர்களை கிறிஸ்தவ புனித நூலான பைபிளைப் படிக்க வைத்திருக்கிறார். இதனையடுத்து, பைபிளில் உள்ள 150 அதிகாரம் கொண்ட, 2 ஆயிரத்து 461 வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்து உலக சாதனை படைக்க விரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் 2 மணி நேரம் 16 நிமிடத்தில் அனைத்து வசனங்களையும் கூறி தற்போது உலக சாதனை படைத்துள்ளனர். இவர்களின் திறமையை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் இருவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.