என்ன ஒரு தாராள மனசு..ரன்களை வாரி வழங்கிய புவனேஸ்குமார் கொந்தளித்த முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி நேற்று நடைபெற்ற தனது முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பாரிஸ்டோ 49 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொய்ன் அலி 20 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 51 ரன்களும், இஷான் கிஷன் 70 ரன்களும், ரிஷப் பண்ட் 29* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அதிமான ரன்களை வாரி வழங்கியது ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் மத்தியில் புதிய அச்சத்தை விதைத்துள்ளது.
குறிப்பாக ஒரு விக்கெட் கூட எடுக்காத புவனேஷ்வர் குமார் 54 ரன்களும், ராகுல் சாஹர் 43 ரன்களும் விட்டுகொடுத்தது புதிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வீரர்கள் பலர் அடுத்த போட்டியில் இந்திய அணியில் ராகுல் சாஹருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியுடனும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூருடன் களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் அடுத்த போட்டிக்கான இந்திய அணி புவனேஷ்வர் குமார் இல்லாமல் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், 'இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு ஏமாற்றத்தையே கொடுத்தது.
அவரால் விக்கெட் எடுக்கவும் முடியவில்லை, ரன்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூருக்கு இந்திய அணி இடம் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, அதிகமான ரன்களை வாரி வழங்கிய ராகுல் சாஹரையும் அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.