ஒரே ஒரு தவறான பந்தால் மாறிய புவனேஷ்வர் குமாரின் வரலாறு..!
INDvsSL
Bhuvaneswar kumar
By Petchi Avudaiappan
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் வீசிய நோ பால் அவரின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பந்துவீச்சை தொடங்கிய இந்திய அணியின் துணைக் கேப்டன் புவனேஸ்வர் குமார் நோ-பால் ஒன்றை வீசினார்.
கிட்டதட்ட 6 வருடங்களுக்குப் பிறகு அவர் வீசும் நோபால் இதுவாகும். அதாவது 3903 பந்துகளுக்கு பிறகு தற்போது தான் நோ பால் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
தரக்குறைவாக பேசிய உயர் அதிகாரிகள் - யாழில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் IBC Tamil