இலங்கை அணியை பார்த்தால் பயமா இருக்குது : உண்மையை போட்டுடைத்த பிரபல இந்திய வீரர்
தற்போதுள்ள இலங்கை கிரிக்கெட் அணியை கணிப்பது சற்று கடினம் தான் என இலங்கை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனான புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18 ஆம் தேதி நடக்க உள்ளது.
இதனிடையே இலங்கை தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் துணை கேப்டன் புவனேஷ்வர் குமார், அறிமுகமே இல்லாத பல இளம் வீரர்கள் உள்ளதால் இலங்கை அணியை கணிப்பது சற்று கடினம் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொடரை வெல்வது தான் எங்களது தற்போதைய குறிக்கோள் என்றும் , தற்போதைய குறிக்கோள். எப்பேற்பட்ட அணியாக இருந்தாலும் நாங்கள் வீழ்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.