ஹைதராபாத் - ராஜஸ்தான் ஆட்டத்தின் முதல் ஓவரில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவம்

josbuttler ipl2022 bhuvaneshwarkumar TATAIPL SRHvsRR NoBalls
By Petchi Avudaiappan Mar 29, 2022 03:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் - ராஜஸ்தான் மோதும் ஆட்டத்தில் முதல் ஓவரில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் போட்டியில்  ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யாஜஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஸ்குமார் வீச அதனை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் ரன் குவிக்க தடுமாறினார். இதனிடையே புவனேஸ்வர் குமார் வீசிய 5வது பந்தில் பட்லர் வேகமாக அடித்துஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதனால் ஹைதராபாத் அணி வீரர்கள் பட்லர் விக்கெட்டை கொண்டாடினர். 

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த பந்து நோ-பால் என அம்பயர் அறிவிக்க பட்லருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் புவனேஸ்குமார் தனது 2வது ஓவரிலும் ஒரு நோ பால் வீச அதன் பிறகு பந்த பவுண்டரிக்கு பறந்தது. மொத்தத்தில் அந்த அணி முதல் 4 ஓவர்களில் 4 நோ-பால்களை வீச்சி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய பட்லர் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.