உலகிலேயே தியேட்டர்களே இல்லாத ஒரே நாடு இதுதான் - எது தெரியுமா?
திரையரங்கம் இல்லாத நாடு குறித்து தெரிந்துக்கொள்வோம்.
திரைப்படங்களுக்கு தடை
தென்னிந்தியாவில் மக்கள் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் திரைப்படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஒரு நாட்டில் திரையரங்குகளே இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால், இருக்கிறது. அதுதான் பூட்டான். இந்த நாட்டில் திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு திரையரங்கம் இல்லை.
பூட்டான்
தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நாடு அதன் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகுக்காக உலகளவில் பிரபலமானது. இங்குள்ள கலாச்சாரத்தின்படி, திரைப்படங்கள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
இதற்கு மாறாக, அங்கு மக்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் தளங்களில் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள்.
இங்கு கால்டன் கெல்லி (சோனம் டோர்ஜி) ஒரு பூட்டானிய நடிகர், மாடல் மற்றும் கலைஞர். அவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் இந்தியத் திரைப்படங்களிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.