உலகில் எந்த நாட்டோட விசா ரொம்ப காஸ்ட்லி தெரியுமா? அமெரிக்கா இல்ல..
உலகில் எந்த நாட்டுடைய விசா அதிக விலை என பார்ப்போம்.
காஸ்ட்லி விசா
உலகின் மிக விலையுயர்ந்த சுற்றுலா விசா வைத்திருக்கும் நாடாக பூடான் உள்ளது. ஒரு பயணி ஐந்து நாட்கள் பூட்டானில் தங்கினால், ஹோட்டல் மற்றும் விமானச் செலவுகளைத் தவிர்த்து,

அரசாங்கக் கட்டணமாக மட்டுமே 500 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அதாவது சுமார் 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
பூட்டான்
இதில் இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்நாடு அதன் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க "அதிக மதிப்பு, குறைந்த அளவு" (High Value, Low Volume) என்ற சுற்றுலா கொள்கையைப் பின்பற்றுகிறது.

எனவே, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் பதிலாக, அதன் அமைதி, இயற்கை மற்றும் ஆன்மீக மதிப்பை உண்மையாக உணர்ந்த பயணிகள் மட்டுமே விரும்பப்படுகின்றனர்.