இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் - எல்லைகளை முடக்கிய பூடான்
India
Corona
lockdown
Bhutan
By mohanelango
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. புதிய பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உருவான இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ் தான் இந்த தீவிரப் பரவலுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதன் தீவிரம் இந்தியாவின் அண்டை நாடுகளிலும் உணரப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான பூடானின் எல்லையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எல்லையோரப் பகுதியில் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா பரிசோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil