Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை!

Indian National Congress
By Vinothini May 17, 2023 11:28 AM GMT
Report

தற்போது உள்ள சத்தீஸ்கரின் முதலமைச்சரான பூபேஷ் பாகேலின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து காணலாம்.

பிறப்பு, கல்வி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சரான பூபேஷ் பாகேல் 1961-ம் ஆண்டு 23 ஆகஸ்ட் அன்று பிறந்தார்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

இவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள துர்க்கில் (தற்போதய சத்தீஸ்கர்) பிறந்தார், இவர் குர்மி சத்திரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் விவசாயியான நந்த் குமார் பாகேல் மற்றும் பிந்தேஸ்வரி பாகேல் ஆகியோருக்கு மகன் ஆவார்.

இவர் தனது உயர்நிலைக் கல்விக்காக எச்.எஸ்.பள்ளி மரார் படன் துர்க் சென்றார். பின்னர், ராய்ப்பூரில் உள்ள பி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

இவர் பிரபல ஹிந்தி எழுத்தாளர் டாக்டர் நரேந்திர தேவ் வர்மாவின் மகளான முக்தேஸ்வரி பாகேலை மணந்தார், இவர்களுக்கு 1 மகன் மாற்றும் 3 பெண்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.

அரசியல்

இவர் சிறுவயதிலிருந்தே, அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் தனது அரசியல் குருவான சந்துலால் சந்திரகரின் வழிகாட்டுதலின் படி, 1980களின் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

இவர் 1985-ல், இந்திய இளைஞர் காங்கிரஸில் (IYC) சேர்ந்தார் பின்னர் அவரது மாவட்டமான துர்க்கில் அதன் தலைவராக ஆனார்.

1990-ல் துர்க் மாவட்ட இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு அப்பதவியில் 1994 வரை நீடித்தார்.

1993-ல் பதான் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கேஜுராம் வர்மாவை 3400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

1998-ல் மீண்டும் பதான் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிருபமா சந்திராகரை தோற்கடித்தார். திக்விஜய் சிங்கின் அமைச்சரவையில், பொது குறை தீர்ப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2000-ல் மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழக தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் தனியாக பிரிந்த போது சத்தீஸ்கர் சட்டசபை உறுப்பினராக அவர் திகழ்ந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் வருவாய், பொது சுகாதார நிர்மாணம் மற்றும் சீரமைப்புத் துரை அமைச்சராக பதவியேற்றார்.

2003 ஆம் ஆண்டில் மீண்டும் சட்டசபை தேர்தலில் பதான் தொகுதியில் போட்டியிட்டார்.சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

2014-ல் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2018-ல் மீண்டும் பதான் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார், மேலும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்ச்சைகள்

இவர் 2017 இல், பாலியல் சம்மந்தப்பட்ட சிடி விவகாரத்தில் சிக்கினார்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

மாநில கேபினட் அமைச்சர் ராஜேஷ் முனாத்தின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் அடங்கிய போலி பாலியல் சம்மந்தப்பட்ட சிடியை விநியோகித்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

சிபிஐ, இவரை குற்றவாளி என்று கண்டறிந்து, 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சமூக நலன்

ஆரம்பத்தில் இருந்தே பாகல் சமூக சேவையில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது மாணவ வாழ்க்கையிலிருந்து அரசியல் தொடங்கியது. சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர்.

Bhupesh Baghel History in Tamil: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞன் முதல்வரான கதை! | Bhupesh Baghel History In Tamil

ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்களை செய்வதை ஊக்குவிப்பவர்.

இவர் பல ஆண்டுகளாக, குறைந்த செலவில் திருமணங்களை ஊக்குவிப்பதற்காக வெகுஜன திருமண விழாக்களை ஏற்பாடு செய்து வந்தார்.

இதன் பொருட்டு ஆண்டுதோறும் இலவச திருமண நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார்.

அவர் மன்வ குர்மி சத்திரிய சமாஜைச் சேர்ந்தவர், எனவே, அவர் 1993 முதல் இந்த சங்கத்தின் புரவலராக இருந்து வந்தார்.