?ELECTION RESULT LIVE : 12 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பதவியேற்கிறார் பூபேந்திர படேல்

BJP Narendra Modi Gujarat
By Thahir Dec 08, 2022 08:24 AM GMT
Report

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு தேதி அறிவிப்பு 

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

bhupendra-patel-takes-oath-as-cm-of-gujarat-on-12

இதில் பாஜக 156 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதையடுத்து குஜராத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.