“ஏங்க பாஸு, இது...அது..ல”- அஷ்வின் போல பந்து வீசி ரசிகர்களை குழப்பிய பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நேற்றைய நாளில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை போல் பந்துவீச முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கிய இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.
அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகள் எடுக்க, ஷமி 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் எடுக்க, முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்திருக்கிறது தென்னாப்ரிக்க அணி.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 23 ரன்களில் வெளியேற,
கடந்த இன்னிங்ஸில் அரைசதம் கடந்த கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அடுத்து மைதானத்திற்குழு வந்த புஜாரா 35 ரன்களுடனும், முன்னாள் துணை கேப்டன் ரஹானே 11 ரன்களுடனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தநிலையில், நேற்று தேநீர் இடைவேளையின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நேற்றைய நாளில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினைப்போல் பந்துவீச முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பும்ரா இதற்கு முன்னதாக விராட் கோலி, ஜடேஜா போன்ற பந்து வீச்சு செய்கையை வலைப்பயிற்சியில் செய்த வீடியோ மிக பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.