பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென வெளியேறியது ஏன் - கண்ணம்மாவே கூறிய பதில்: ரசிகர்கள் சோகம்
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை ரோஷினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் மனமுடைந்த ரசிகர்கள் ஏன் எதற்கு என தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சீரியலில் இருந்து முழுமையாக விலகிய பிறகு எதற்கு வெளியேறினேன் என்பது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் அவர்களது சோகத்தை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.