உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே : பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த பவினா!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸில் அரையிறுதிக்கு நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் பவினா படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் காலிறுதிப் போட்டியில் பவினா பட்டேல் செர்பியா நாட்டின் பெரிக் ரென்கோவிக்கை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியை 11-5,11-6,11-7 என்ற கணக்கில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனையை தோற்கடித்தார். அத்துடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மேலும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான பெரிக் ரென்கோவிக்கை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்துள்ளார்.
Tokyo Paralympics: PCI chief Deepa Malik elated as paddler Bhavina assures India medal
— ANI Digital (@ani_digital) August 27, 2021
Read @ANI Story | https://t.co/BWXeyJIrzC#Paralympics #TeamIndia pic.twitter.com/t70BR8CkW8
மேலும் இந்தியாவிற்கு டோக்கியோ பாராலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்
இதன் மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை தன்னுடைய முதல் பாராலிம்பிக்கில் படைத்து அசத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்
வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil