பாரா ஒலிம்பிக் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

Bhavina Patel tokyoparalympics2020
By Petchi Avudaiappan Aug 26, 2021 07:48 PM GMT
Report

பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென் படேல் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 2 ஆம் நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் லீக் ஆட்டங்களில் பவீனாபென் படேல், சோனல்பென் படேல் இருவரும் சீன விராங்கனைகளிடம் தோல்வி அடைந்தனர்.

இதனையடுத்து 3 ஆம் நாள் ஆட்டத்தில் பவீனாபென் படேல் நேற்று பிரிட்டன் வீராங்கனை மேகன் ஷக்லெடனுடன் மோதினார். இதில் பவீனா முதல் செட்டை 11-7 என்ற கணக்கிலும், மேகன் 2வது செட்டை 11-9 என்ற கணக்கிலும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 3வது மற்றும் 4வது செட்டை பவீனா 17-15, 13-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். சுமார் 41 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 3-1 என்ற கணக்கில் பவீனா கைப்பற்றி பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் வெற்றியை பதிவு செய்தார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.