பவானி என்னை மன்னிக்க மாட்டாள் ... விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்..!

தனது தோழியின் மரணத்தால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன் என விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 25 ம் தேதி அதிகாலை 1 மணியளவில் புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பிய போது மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவருடன் பயணித்த அவரது தோழி வல்லி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் , இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டகிராம் பதிவில் தற்போதைய நிலையினை என்னால் வெளிப்படுத்த முடிவில்லை என்றும் எப்போதும் குற்ற உணர்வு நீங்காது என்றும் கூறியிருக்கும் யாஷிகா.

கோர விபத்தில் இருந்து தனது உயிரை காத்த கடவுளுக்கு நன்றி செல்வதா? அல்லது என் சிறந்த தோழியை பறித்ததற்காக வாழ்நாள் முழுவதும் பழிப்பதா? என்று கூறியுள்ளார். பவானி என்னை மன்னிக்க மாட்டாள் என்றும் பவானியின் குடும்பத்தை இத்தகைய கடின சூழலுக்கு தள்ளியதற்கு மன்னிப்பு கூறுவதாகவும் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

பவானியின் குடும்பம் ஒருநாள் தன்னை மன்னிக்கும் என்றும் எப்பொழுதும் பவானியின் நினைவுடன் வாடுவேன் என்றும் யாஷிகா தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்