நீதிமன்றத்திலும் பாதுகாப்பு இல்லை - வன்கொடுமை வீடியோ - பாவனா வேதனை
மலையாள நடிகை பாவனா, கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது பெரும் அதிர்வலைகளை திரைத்துறையில் ஏற்படுத்தியது.
பாவனா
மிஷ்கின் இயக்கிய "சித்திரம் பேசுதடி" படத்தில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து தமிழில் வெயில், ஜெயம்கொண்டான், அசல், தீபாவளி என குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்து பாவனா, கடந்த 2017-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சில முன்னணி நடிகர்களுக்கும் தொடர்ப்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.
மலையாள முன்னணி நடிகரான திலீப்பின் பெயர் இதில் அடிப்பட்டது. அதனையடுத்து பாவனா 5 வருடம் மலையாள படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கன்னடம் மொழி படங்களில் கவனம் செலுத்திய அவர், 2023-ஆம் ஆண்டு தான் மீண்டும் மலையாளத்தில் நடிக்க துவங்கினார்.
பாதுகாப்பே இல்லை
இவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட நிலையில், அக்காட்சிகள் இருக்கும் மெமரி கார்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. செசன்ஸ் கோர்ட்டின் உத்தரவின் பேரில் வீடியோவின் ஒரு காப்பியை பெற்ற அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் இது குறித்து பகிர்ந்த அவர், “ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது பிரைவசியை பாதுகாக்க அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் இந்த காட்சிகள் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்க்கும்போது அந்த உரிமையை மறுப்பது போன்று இருக்கிறது.
அதுமட்டுமல்ல நீதிமன்றத்தில் கூட என்னுடைய பிரைவசிக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என்பது என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அப்படி ஒரு தவறு நீதிமன்றத்தின் பக்கத்தில் இருந்த நிகழும்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பலத்தை இழந்து விடுவார்கள்.
அதே சமயம் குற்றவாளிகள் பெருமையுடன் தலை நிமிர்ந்து நம்மை சுற்றி நடந்து வருவார்கள் என்பது இன்னும் வருத்தத்தை தருவதாக இருக்கும். ஆனாலும் எனக்கான நீதியை பெறும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்”