பணபரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்பி பாவனா கவாலி அதிரடி கைது

Arrest MP Bhavana Gawali
By Thahir Sep 28, 2021 09:17 AM GMT
Report

சிவசேனா எம்பி பாவனா கவாலி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி பாவனா கவாலி மற்றும் அவரது சயீத் கானையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

எம்.பி பாவனாவின் அறக்கட்டளையில் ரூ.17 கோடி பணபரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

பணபரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்பி பாவனா கவாலி அதிரடி கைது | Bhavana Gawali Mp Arrest

பாவனா கவாலி மகாராஷ்டிராவின் யவத்மல் வாஷிம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். எம்பி பாவனா கவாலியுடன் தொடர்புடைய அறக்கட்டளையில் சுமார் 17 கோடி ரூபாய் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரூ.43.35 கோடி கடன் பெற்று பாலாஜி சஹ்கரி துகள் வாரியம் என்ற நிறுவனத்தின் மூலம் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தை (என்சிடிசி) பாவனா கவாலி ஏமாற்றியதாக ஹரீஷ் சர்தா என்ற சமூக சேவகர் சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

ஹரீஷ் சர்தா, பாவனா கவாலி என்சிடிசியிடம் பத்து வருடங்கள் கடன் வாங்கியதாகக் கூறியுள்ளார். ஆனால் நிறுவனம் உண்மையில் தொடங்கப்படவில்லை என்றும் தகவல் கூறப்படுகிறது.

பாவனா கவாலியின் நிறுவனமான, பாவனா அக்ரோ புரொடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் லிமிடெட் தொடர்பாகவும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்திற்காக, அவர் இரண்டு வங்கிகளில் இருந்து ரூ.7.5 கோடி கடன் வாங்கியதாகவும், நிறுவனம் பின்னர் அவரது தனிப்பட்ட செயலாளருக்கு ரூ.7.09 கோடிக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், சிவசேனா எம்.பி பாவனா கவாலியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.