இன்று பாரதியாரின் 100வது நினைவு தினம் - பிரதமர் மோடி தமிழில் டூவிட்
பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
மகாகவி பாரதியார் தனது 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11- நள்ளிரவு இறந்தார்.இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில்,பாரதியாரின் நினைவை போற்றும் வகையில்,செப்டம்பர் 11 ஆம் தேதி 'மகாகவி நாளாக' கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில்,பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி,தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்",என்று பதிவிட்டுள்ளார்.
சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021