பாரதி பாஸ்கர் வேதனை;மூளையில் ஆப்ரேஷன் திரும்பவும் பேசுவாரா.. இப்படி எல்லாம் போடலாமா?

By Thahir May 11, 2022 08:29 PM GMT
Report

பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர் கடந்த ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து பேட்டியளித்துள்ள அவர்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என்னுடைய உடல் நலம் பற்றி என்னுடைய மருத்துவருக்கு தான் தெரியும்,

பாரதி பாஸ்கர் வேதனை;மூளையில் ஆப்ரேஷன் திரும்பவும் பேசுவாரா.. இப்படி எல்லாம் போடலாமா? | Bharati Bhaskar Pain Speech

என்னுடைய நிலைமையை என் கணவர் தாங்க கூடிய மனநிலையில் அப்போ இல்லை,என்னுடைய இரண்டாவது மகள் தைரியசாலி, மருத்துவர்கள் அவ கிட்ட தான் பேசியிருக்காங்க,வேற யாருக்குமே நான் சரி ஆவேனா என்பதெல்லாம் தெரியவே தெரியாது.

இந்த சூழலில் யூடியூப் சேனல்ஸ் பாரதி பாஸ்கர் மூளையில் ஆப்ரேஷன்..திரும்பவும் பேசுவாரா இப்படி எல்லாம் டைட்டில் போட்டு போக ஆரம்பிச்சது.

இதையெல்லாம் பார்த்த பல பேர் என்னை அவுங்க வீட்டு பொண்ண நினைக்கும் வயசானோர் பயந்து போய் அழுது பெரிய பீதியை கிளப்பி விட்டுட்டாங்க.

என்னுடைய உறவுகாரவுங்க பார்க்கும் போது எப்படி இருந்து இருக்கும். என்னுடைய மகள்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.

என்னுடைய மகளுக்கு உங்க அம்மாவுக்கு இப்படியா என்று பலரும் மெசேஜ் செய்ததாக தெரிவித்தார். அதை பார்த்து என் மகள் எப்படி வருத்தப்பட்டு இருப்பாள்.

யாரே ஒருவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை போட்டு இருக்காங்க அது நிச்சயமா நான் இல்லை.

அந்த படத்தை துாரத்தில் போட்டுவிட்டு பிழைத்து வருவாரா?பேசுவாரா? என வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக கூறினார்.

யாரோ ஒரு மருத்துவரை அழைத்து என்ன நடந்திருக்கும் என்று பேட்டி எடுத்தார்கள்.அந்த மருத்துவருக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவங்கள் பாரதி பாஸ்கரை எரிச்சல் படுத்தியதாக தெரிவித்தார். நிறைய பேர் பார்க்க வேண்டும் என்று இப்படி செய்யலாமா?அவுங்க அவுங்க வீட்டுல இப்படி நடந்த செய்வாங்கலா? என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.