பாரதியார் மறைந்தது செப்.11ம் தேதியா? 12ஆம் தேதியா? – அரசின் அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை

birthday bharathiyar
By Anupriyamkumaresan Sep 19, 2021 01:00 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேடு மற்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 12ஆம் தேதி மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும். அந்த நாளிலேயே ‘மகாகவி நாள்’ கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி பற்றாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகாகவி சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி என பன்முகங்களைக் கொண்ட அவர், திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் 1921ஆம் ஆண்டு செப்.12ஆம் தேதி காலமானதாக பாரதியார் வாழ்க்கை குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதியார் மறைந்தது செப்.11ம் தேதியா? 12ஆம் தேதியா? – அரசின் அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை | Bharathiyar Death Day Problem Government Issue

ஆனால், தமிழக அரசு இதுநாள்வரை பாரதியார் நினைவு தினத்தை ஆண்டுதோறும் செப். 11ஆம் தேதியே அனுசரித்து வருகிறது. ‘பாரதியார் நினைவு தின நூற்றாண்டை முன்னிட்டு, பாரதியின் நினைவு நாளான செப்.11ஆம் தேதி அரசு சார்பில் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும்’ என்றே தற்போதும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாரதியார் காலமானது செப்.11ஆம் தேதியா, 12ஆம் தேதியா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாரதியார் ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன், 1957ஆம் ஆண்டுஎழுதி வெளியிட்டுள்ள ‘சித்திர பாரதி’ நூலில், பாரதியார் காலமானபோது இருந்த சூழல்கள் குறித்துஎழுதியுள்ளார். அதில் கூறப்பட் டுள்ளதாவது: பாரதியார் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கு, பின்னர் ரத்தப்போக்கால் அவதிப்பட்டுள்ளார்.

பாரதியார் மறைந்தது செப்.11ம் தேதியா? 12ஆம் தேதியா? – அரசின் அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை | Bharathiyar Death Day Problem Government Issue

செப்.11ஆம் தேதி இறக்கும் தருவாயில், ஆப்கானிஸ்தான் மன்னராக இருந்த அமானுல்லா கான் குறித்த கட்டுரையை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு எழுத வேண்டும் என உடன் இருந்த நண்பர்களுடன் பேசியுள்ளார்.

அப்போது, பிரபல மருத்துவர் சிகிச்சை அளிக்க வந்தும், அதை ஏற்க மறுத்துள்ளார். அதன் பின்னர் தொடர் மயக்கத்திலேயே இருந்துள்ளார். நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்டோர் பாரதியின் வீட்டில் இரவில் கவலையுடன் விழித்திருந்தனர்.

செப்.12ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பாரதி மரணத்தை தழுவினார். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. பாரதியார் வாழ்ந்த எட்டயபுரம், பாரதியார் நினைவு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் அவர் செப்.12ஆம் தேதி காலமானதாகவே பதிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் மறைந்தது செப்.11ம் தேதியா? 12ஆம் தேதியா? – அரசின் அறிவிப்பால் கிளம்பிய சர்ச்சை | Bharathiyar Death Day Problem Government Issue

சென்னை மாநகராட்சியின் இறப்பு பதிவேட்டிலும் அவர் செப்.12ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பாரதியார் நினைவு நாளாக செப்.12ஆம் தேதியையே அரசு ஏற்க வேண்டும்.

ஆண்டுதோறும் பாரதி நினைவு நாள் ‘மகாகவி நாள்’ கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதையும் செப்.12ஆம் தேதியே கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.