Sunday, Mar 30, 2025

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Manoj Bharathiraja Bharathiraja
By Arbin 5 days ago
Report

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா

மனோஜ் பாரதிராஜா, தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் | Bharathirajas Son Manoj Passes Away

இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அவர் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மகா நடிகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மட்டுமின்றி கார்த்தியின் நடிப்பில் வெளியான 'விருமன்' மற்றும் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த மாநாடு ஆகிய படங்களிலும் மனோஜ் நடித்திருந்தார். அத்துடன், கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலமாக மனோஜ் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இளையராஜா இரங்கல்

இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு நந்தனா என்பவருடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் | Bharathirajas Son Manoj Passes Away

மனோஜ் இறப்புக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், எனது நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன் என பதிவு செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.