மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தர் .. பாரதிராஜா போட்ட உருக்கமான ட்வீட்...

Silambarasan T Rajendar
By Petchi Avudaiappan May 24, 2022 04:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிரபல நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா உருக்கமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மே 19 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அவரின் மகனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான  சிலம்பரசன் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் பிரபல இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பேரன்பு கொண்ட சகோதரர் திரு.T.R. அவர்கள் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர் பூரண நலம்பெற்று தமிழுக்கும் தமிழ் திரைத்துறைக்கும் தொடர்ந்து சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.