சசிகலா தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளார் - இயக்குநர் பாரதிராஜா
பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா கடந்த சில வாரங்களாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சசிகலாவை பலரும் இன்று சந்தித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இன்று சசிகலாவை சந்தித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவும் சசிகலாவைச் சந்தித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, “தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதனை நிரப்பவே சசிகலா வந்துள்ளார்” என்றார்.
மேலும் பலரும் இன்று சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.