மறைந்த பாரதிராஜாவின் கடைசி படம் ‘புலவர்’ – வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

Tamil Cinema Bharathiraja
By Vinoja Jun 13, 2026 07:25 AM GMT
Report

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படமான ‘புலவர்’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

புலவர் திரைப்படம் 

இயக்குநர் முருகய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார்.

மறைந்த பாரதிராஜாவின் கடைசி படம் ‘புலவர்’ – வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | Bharathiraja Starrer Puzhavar Movie Release Update

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment) நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும், ‘புலவர்’ திரைப்படம் நார்வே சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு கவனம் பெற்றது.

இந்நிலையில், படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இருப்பினும், இதுவரை படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனித்துவமான முத்திரையை பதித்தவர் பாரதிராஜா. அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘துடரும்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.