ரஜினி முகத்தில் காரி துப்பிய பிரபல இயக்குநர் - அதிர்ச்சி காரணம்!
ரஜினியின் முகத்தில் பிரபல இயக்குநர் எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் குறித்த சில தகவல்களை ரேடியோ ஜாக்கி ஷா யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அதில், “16 வயதினிலே படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தார். அப்போதே அவர் பிரபலமான வில்லனாக மாறிவிட்டார்.
அந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்தை துப்புவது போன்ற ஒரு காட்சி இருந்தது. பாரதிராஜா சோப்பை கரைத்து, ரஜினியின் முகத்தில் வீசுகிறார். அந்த காட்சியை எடுத்து விட்டார்கள்.
16 வயதினிலே
ஆனால் பாரதிராஜாவோ, ஏதோ ஒரு வித தொந்தரவை உணர்வது போல இருந்தார். இதனையடுத்து பாரதிராஜா தனக்கு அந்த காட்சியில் திருப்தி இல்லை என்று சொல்ல, ரஜினிகாந்த் உடனே.. தலைவரே நீங்கள் என் மீது துப்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதை சொன்ன பொழுது, பாரதிராஜா அப்படியே உறைந்து போய்விட்டாராம். அதன் பின்னர் அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.