நான் செத்தா அவதான் காரணம் - பிரபல நடிகையால் அரண்ட பாரதிராஜா!
தனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்தால் குஷ்பு தான் காரணம் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
குஷ்பு
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் கேப்டன் மகள் என்ற படத்தில் நடித்திருந்தார் குஷ்பு.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். யக்குநர் பாரதிராஜாவுக்கு பாம்பை பார்த்தாலே தனக்கு வியர்த்து விறுவிறுக்க ஆரம்பித்துவிடும் அந்த அளவுக்கு பாம்பு மீது பயம்.
பாரதிராஜா ஆவேசம்
ஒய்வில் இருந்தபோது, வேறு ஒரு படப்பிடிப்பிற்காக பல் பிடுங்கப்பட்ட பாம்பு வைக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த பல் பிடுங்கப்பட்ட பாம்பை தனது கைகளில் எடுத்துக்கொண்டு பாரதி ராஜாவிடம் சென்று, சார் இங்கே பாருங்க பாம்பு என காட்டியுள்ளார். இதனை பார்த்த பாரதிராஜா அரண்டு மிரண்டு ஓட்டம் பிடித்தார்.
ஒரு கட்டத்தில் படக்குழுவினர் என்னை நிறுத்தினர். இதையடுத்து ஓட்டத்தை நிறுத்திய பாரதிராஜா, உடல் முழுக்க வியர்த்துப் போய், நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு அவள்தான் காரணம் என திட்டியதாக கூறியுள்ளார்.