Friday, Jul 11, 2025

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் இயக்குனர் பாரதிராஜா

covid director bharathiraja safe returned home
By Swetha Subash 3 years ago
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் நாட்டையே கடுமையாக தாக்கி வருகிறது.

இந்த அலையின்போது பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என்றும் அவருடைய சமூக வலைத்தளப் பககத்தில் பதிவிட்டுள்ளார்.