இயக்குநர் பாரதிராஜா நலம்பெற பிரான்ஸ் தேவாலயத்தில் நடிகை ராதிகா பிரார்த்தனை..!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுசுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
நேற்று முன்தினம் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, இயக்குநர் பாரதிராஜா நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பாரதிராஜாவிற்கு சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
அவருக்கு, உடலில் உப்பின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் குறைவாக உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனால், பாரதிராஜா சோர்வாக இருந்ததால் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகை ராதிகா பிரார்த்தனை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா விரைவாக நலம்பெற வேண்டி, பிரான்ஸில் உள்ள லூர்து தேவாலயத்தில் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்புப் பிரார்த்தனை செய்துள்ளார்.
இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, பிரான்சில் உள்ள லூர்து தேவாலயத்தில் நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. நான் திரும்பும்போது விரைவில் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறேன், உங்களுடன் பேசுவதைத் தவறவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
En iniya director @offBharathiraja avargaley, my special prayer to you to get well soon at the Lourdes church ,in France. waiting to see you soon on my return, miss talking to you ????? pic.twitter.com/Pg9LsFCh5F
— Radikaa Sarathkumar (@realradikaa) August 25, 2022