இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைந்தார்
Bharathiraja
By Fathima
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா(வயது 84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
1977ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா, கிராமத்திய பின்னணியில் பல வெற்றி படங்களை உருவாக்கி தமிழ்சினிமாவின் நட்சத்திரமாய் உருவெடுத்தார்.
பல சினிமா நட்சத்திரங்களை அறிமுகம் செய்த, உருவாக்கிய பெருமை இவரையே சாரும், இயக்குனர் இமயம் என போற்றப்படும் இவரது மரணம் திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
