மீண்டும் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக் குறைவால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் மீண்டும் பாரதிராஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 21-ம் தேதி தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதன்பின் நீலாங்கரை இல்லத்தில் ஓய்வெடுத்துவந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல் அவருக்கு நெருக்கமான பலரும் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், வீட்டிற்கு சென்ற சில நாட்களிலே பாரதிராஜாவிற்கு சிறுநீரக குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சில நாட்களுக்கு அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற பரிந்துரைத்தனர். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாரதிராஜா.
இந்த நிலையில் நாளை அல்லது ஒரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் IBC Tamil
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil