நடிகை சம்யுக்தாவை காதலிக்கும் பாராதிராஜா - மேடை பேச்சால் பரபரப்பு
நடிகை சம்யுக்தாவை காதலிப்பதாக இயக்குநர் பாராதிராஜா தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே தமிழில் பப்பி, வாட்ச்மேன், கோமாளி உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார்.
ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து படம் முழுக்க கவனம் ஈர்த்தார். இவருக்கும் ஜெயம் ரவிக்குமான நான் சும்மா சீனு டி” பாடல் வைரல் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தாவுடன் காதல்?
இதை தொடர்ந்து வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. வெங்கி அட்லுாரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் கால்களில் விழுவேன். சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது.
கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன்.
இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது, காலம் தப்பி பிறந்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
