பாரதிராஜா இறக்கும்போது யாரும் இல்லை ஏன்? தம்பி உடைத்த உண்மை
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயமாக இருந்த பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு காலமான நிலையில், அவர் உயிரிழக்கும் தருணத்தில் அருகில் யாரும் இல்லை என்று கங்கை அமரன் ஆவேசப்பட்டார்.
இயக்குனர் பாரதிராஜா
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கிராமத்து கதையை மையமாக கொண்டு பல திரைப்படங்களை இயக்கியதுடன், பல கதாநாயகிகளையும் அறிமுகம் செய்தார்.
1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் பொதுமக்களின் வீதிக்கு கொண்டு வந்தவர் ஆவார்.
சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மரணம் குறித்து சில சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.

தம்பி கூறிய உண்மை
பாரதிராஜாவின் கடைசி நேரத்தில் அவரை தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே... சாகும் போது அனாதையாக சாக விட்டுவிட்டீர்களே என்று மிகுந்த ஆவேசத்துடன் கங்கை அமரன் பேசினார்.
இவை ரசிகர்களிடையே பல சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது கடைசி காலத்தில் பாரதிராஜாவை யாரும் கவனிக்கவில்லையா? என்ற கேள்வியும் எழத் தொடங்கியது.
தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கங்கை அமரன் எங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றவர்... அண்ணன் மீது அதிகப்படியான பாசத்தில் அவ்வாறு பேசியுள்ளார்.

எங்களது அண்ணி அண்ணனை நன்றாக கவனித்துக் கொண்டார். சம்பவத்தன்று தேனியில் ஒரு விடயமாக இங்கு வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக அண்ணன் இறந்துவிட்டார்.
இதனைக் கேட்டதும் அண்ணி பதறிப்போய் மீண்டும் சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார். இதுதான் அன்று நடந்த உண்மை என்றும் இந்த விபரம் தெரியாமல் கங்கை அமரன் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
நாங்கள் அவரிடமும் பேசி நடந்ததை விளக்கி புரிய வைத்துள்ளதாகும், இனி எந்தவொரு பிரச்சனையுமு் இல்லை.. சுமூகமாக முடிந்துவிட்டது என்று பேசியுள்ளார்.