பாரதிதாசனுக்கு கல்வி நிதி வழங்கப்படும்: அமைச்சர் வன்னி அரசு
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவன் பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ஏப்ரல் மாதம் முதல் கேட்டும் கிடைக்கவில்லை என பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆனால் மாணவருக்கு உரியநிதி வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமான பாரதிதாசன் வெளியிட்ட வீடியோவில், தன் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது வருத்தமளிப்பதாகவும், சமூகநீதித்துறையிலிருந்து தன் மீதே குற்றம்சாட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசனின் படிப்பு தொடர வேண்டும், குறித்த ஆராய்ச்சி படிப்பை தமிழ்நாட்டில் இருந்து இவர் மட்டும் தான் படிக்கிறார், அவர் முழுமையாக படித்துவிட்டு திரும்ப வேண்டும், இந்தாண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.