‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் திடீர் திருப்புமுனை - அப்பா பாரதியை கண்டுபிடித்த லட்சுமி - வெளியான பரபரப்பு ப்ரொமோ

promo Serial viral Bharathi Kannamma பாரதி கண்ணம்மா சீரியல் லட்சுமி பாரதி
By Nandhini Mar 22, 2022 12:07 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் வரவேற்பில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

சாப்பாடு கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தொடரை பார்க்காமல் இல்லத்தரசிகள் இருக்கமாட்டார். அந்த அளவிற்கு இந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் லட்சுமியின் அப்பா யார் என கண்ணம்மா கூறுவது போல ப்ரோமோ வெளியானது.

அதற்கு ரசிகர்கள், என்ன... கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா என்று நினைத்தார்கள். ஆனால், கண்ணம்மா, லட்சுமியிடம் உனது அம்மா, அப்பா எல்லோரும் நான் தான் என்று கூறிவிடுகிறார். இதன் பின்னர் லட்சுமி தன்னுடைய அப்பா யார் என்பதை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

தனக்கு கிடைத்த ஆதாரத்தோடு அப்பாவைத்தேடி அலைகிறார். பிறகு தன்னிடம் இருந்த முகவரியை வைத்து பாரதி அங்கிள் தான் தன்னுடைய அப்பா என்பதை கண்டுபிடிக்கிறாள் லட்சுமி.

8 ஆண்டுகளாக தன்னுடைய அப்பா யார்? எனத் தெரியாமல் இருந்த லட்சுமி, தற்போது தெரிந்துக்கொண்ட நிலையில் அப்பா டாக்டர் பாரதியைத் தேடி, லட்சுமி மருத்துவமனைக்கு செல்கிறார் லட்சுமி.

தற்போது, இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரொமோவில், பாரதி லட்சுமியை பார்த்து என்ன... இன்றைக்குதான் என்னை பார்க்கிற மாதிரி கண் சிமிட்டால் பார்க்கிற.. என்று கேட்டதற்கு, என்னென்னு தெரியல.. உங்களை பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கிறது என்று லட்சுமி பேசும் ப்ரொமோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.