பாரதி கண்ணம்மாவிலிருந்து அஞ்சலி திடீர் விலகல் - அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள் - ஷாக்கான ரசிகர்கள்

serial bharathi kannamma Deviation Kanmani Manoharan
By Nandhini Feb 03, 2022 04:46 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்திழுத்த சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மாதான். இத்தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மீம்ஸ் கிரியேட்டர்களால் டுவிட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்க விட்டது ‘பாரதி கண்ணம்மா’ தொடர். ‘பாரதி கண்ணம்மா’ தொடராக மட்டுமே விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் வைத்துள்ளது.

இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார். முன்பு கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். ரோஷினையை தொடர்ந்து அகிலனும் சீரியலிலிருந்து வெளியேறி திரைப்படத்துக்கு சென்றார்.

தற்போது புது அகிலனாக நடித்து வருகிறார் சுகேஷ். இந்நிலையில், அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகியுள்ளார். இத்தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சமூகவலைத்தளங்களில் கண்மணி அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், இன்னும் ஒரு ப்ரோஜக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சீரியலிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. 

பாரதி கண்ணம்மாவிலிருந்து அஞ்சலி திடீர் விலகல் - அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள் - ஷாக்கான ரசிகர்கள் | Bharathi Kannamma Serial Kanmani Manoharan