பிரபல சீரியல் நடிகையை காதலிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் நடிகர் - யார் தெரியுமா?
தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா சீரியல்.இத்தொடர் தினமும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த சீரியல் தொடரில் நிறைய நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.குறிப்பாக கதாநாயகி மாற்றம் நடந்திருக்கிறது. இத்தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோஷினி இவர் திடீரென இத்தொடரில் இருந்து விலகினார்.அவருக்கு பதில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
நடிகை வினுஷாவுக்கு FInd Of The Year என்ற விருது விஜய் டெலிவிருது விழாவில் கொடுக்கப்பட்டது. இத்தொடரின் தொடக்கத்தில் இருந்து கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்.
இவருக்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இவரை பற்றி ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருது டெலிவிருது வழங்கும் விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.
அந்த விழாவில் அவரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பாரதி,டாக்டர்,கலாய்த்து தள்ளினர்.
இந்நிலையில் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துவிட்டது.
இருவரும் ஒன்றாக இருந்த வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
