என்னது நீங்களும் வெளியே வந்துட்டீங்களா? - வைரலாகும் 'பாரதி கண்ணம்மா' ஹீரோ இன்ஸ்டா போஸ்ட்

bharathikannamma actorarun instagrampost
By Irumporai Nov 29, 2021 07:30 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்  தொடர்களில் மிகவும் வரவேற்பை பெற்றது பாரதி கண்ணம்மா. இதில் பாரதியாக நடிப்பவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. 

இவர் இதற்கு முன்பு , மேயாத மான் படத்தில் இவர் வைபவ்வின் நண்பராக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

என்னது நீங்களும்  வெளியே வந்துட்டீங்களா? - வைரலாகும்

இதனால் அருண், பாரதி கண்ணம்மா சீரியலிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாக  இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு டூர் போயிருப்பதாகவே பாரதி கண்ணம்மா சீரியல் வட்டாரம் தெரிவிக்கிறது.தற்போது  அருண் பிரசாத் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.