‘பாரதி கண்ணம்மா’ சீரியலிலிருந்து திடீரென விலகும் அருண் பிரசாத்? நடந்தது என்ன?
ரசிகர்கள் அதிர்ச்சி தமிழ் சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா சீரியல். இத்தொடர் தினமும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியல் தொடரில் நிறைய நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.
குறிப்பாக, இத்தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோஷினி. இவர் திடீரென இத்தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதில் வினுஷா என்பவர் தற்போது நடித்து வருகிறார்.
தற்போது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி வேடத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருண் பிரசாத்திற்கு பதிலாக, பிக்பாஸ் பிரபலமான சஞ்சீவ் பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
அருண் பிரசாத்தும் வெளியேறிவிட்டால் சீரியல் நிலைமை என்னவாகுமோ என்றும், இத்தகவல் உண்மையா? பொய்யா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.