கண்ணம்மாவுக்கு திடீர் திருமணம்: வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் பாரதி கண்ணம்மா, இந்த சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் ரோஷினி ஹரிப்ரியன்.
அசத்தலான நடிப்பால் வீட்டில் ஒருவராகவே வலம்வந்தார் ரோஷினி, தொடர்ந்து வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளும் அமைந்தது.

கருடன் மெட்ராஸ் மேட்னி, தலைவன் தலைவி படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில், நடிகை ரோஷினிக்கு சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது, மிக எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்த திருமணம் நடந்துள்ளது.
பாரதி கண்ணம்மாவில் இவருடன் இணைந்து நடித்த கண்மணி, ஃபரினா, காவ்யா, அருண் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை: பிரபு எம்.பி சாடல் IBC Tamil
நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல் IBC Tamil
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம் IBC Tamil