“என்னை மன்னித்துவிடுங்கள்” பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகியது குறித்து ரோஷினி உருக்கம்

bharathi kannamma Drama Roshini Haripriyan
By Thahir Nov 16, 2021 08:10 PM GMT
Report

சின்னத்திரை தொடர்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் தொடர் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா.

குறிப்பாக இந்தத் தொடரில் கண்ணம்மாவா நடிக்கும் ரோஷினிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் ரோஷினி இந்தத் தொடரில் இருந்து திடீரென விலகினார்.

அவர் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாகவும் அதனாலேயே அவர் இந்தத் தொடரில் இருந்து விலகவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரோஷினி தரப்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவருக்குப் பதிலாக, வினுஷா தேவி நடித்துவருகிறார். வினுஷா தேவி இடம் பெற்ற காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பானது.

கண்ணம்மாவாக ரோஷினியை பார்த்தவர்களுக்கு வினுஷாவை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருக்கலாம். இந்த நிலையில் ரோஷினி விலகியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், என்னால் பாரதி கண்ணம்மா தொடரில் சில காரணங்களால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. என்னுடைய முடிவு உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். என்று தெரிவித்துள்ளார்.