பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பாவிற்கு குழந்தை பிறந்தது - ரசிகர்கள் மகிழ்ச்சி: வாழ்த்து!
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவிற்கு ஆன் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனா வெண்பா என்ற பெயரில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் ஓய்வு எடுக்காமல் சீரியலில் நடித்து வந்தார்.
இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருந்த இந்த நேரத்தில் இன்று அவருக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளதாக அவரே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.